- அது அற்புதக் கலைத்திறனோடு படைக்கப் பட்ட வட்ட வடிவமாய் சமைந்த ஒரு உன்னதமான உப்பு.
- அதி மதிநுட்பமும்,கலைத்திறனும் கொண்ட ஒரு கலைஞனுடைய தேவைகள் எதுவாயினும் அதற்குரிய பதில்களை அது தன்னகத்தே கொண்டுள்ள வல்லபம் உள்ள பொருள்.இருந்த போதிலும்,
- அது சாதாரணமாக தண்ணீரில் கரைந்து போகும்.ஒரு சாதாரண ஜடத்தன்மை கொண்ட உப்பு அல்ல.
- ஆனால்,உப்பின் சுவை ஒத்த சாராயம் போன்றது.
- அது சூட்டிலே பாகப்படும் போது அத்திரவத்தில் உள்ள ஈரத்தன்மை ஆவியாய் வெளியேறினும் அது திரண்டு கெட்டி பொருளாய் மாறுவதில்லை.
- ஆயினும்,அதனது ஆவியின் சக்தி தனது நீர்மப் பரப்பில் எல்லா இடங்களிலும் சமமான அழுத்த நிலையில் வியாபித்து நிலைகொண்டு இருக்கும்.
- இலகு தீயில் ஆவியாக மாறினும் வண்டல் போன்ற எப்பொருளையும் மிச்சம் விட்டு வைக்காமல் முற்றிலுமாய் ஆவியாக போய்விடும்.
- இந்த ஆவி பொருள் அமிலமோ,அல்லது காராப் பொருளோ அல்ல.
- ஆனால் உப்பே.
தொடரும்.,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக