ஞாயிறு, 26 அக்டோபர், 2014

24.உங்களை பிராத்திக்கிறேன்.அது எது என்று எனக்கு கூறவும் ?


  • மனித உடலில் இருந்து வெளியேறும் மனிதனுடைய இரத்தம் அல்லது மனிதனுடைய அமுரி.
  • அமுரி என்பது புறத்தே கழிக்கப்படும் அப்புறப் படுத்தப் படும் பொருளாகும்.
  • அதனுடைய உன்னதமான பொருள் பகுதி ரத்தத்திலிருந்து கிடைப்பதுதான்.
  • இந்த இரண்டு பொருள்களுமே ஆவியாகி நிலையான உப்பை வழங்குகிறது.
  • அதனை எப்படி சேகரிப்பது தயாரிப்பது என்பது குறித்து உனக்கு த் தெரிந்திருக்குமாயின் வாழக்கையில் விலை மதிக்க முடியாத அதி உன்னதமான பளிங்கொத்த வாசமிக்க ஒரு மெழுகினை நீ அடைவாய். 
7.மிருகாதிகளின் அமுரியை காட்டிலும்,மனித இனத்தின் அமுரியில் உள்ள வஸ்துக்கள்தான் அதிக உன்னதமானதா ?

தொடரும்.,

23.எது அதி உன்னதமான உப்பாகும் ?


  • நீ இதை தெரிந்து கொள்ள விரும்பினால் (நீ )உனக்குள்ளேயே சிந்தனையில் இறங்கி எதிலிருந்து பெறப்படுகிறது என்று சிந்தனை செய்தால் நீயே அதனை சுமந்து கொண்டிருப்பது தெரியும்.
  • அதோடு அந்த உப்பு ரோமாபுரியின் அக்னி தேவதைக்கு (vulcan ) உரியது என்பதும் விளங்கும்.நீ அதை நேரில் பார்ப்பாயானால் அதனது தோற்றத்தை கண்டும் நீ புரிந்து கொள்ள கூடும்.



6.உங்களை பிராத்திக்கிறேன்.அது எது என்று எனக்கு கூறவும் ?

தொடரும் .,

22.இந்த அல்கஹாஸ்ட்டிற்கு அடுத்த பொருள் எது ?


  • நான் உனக்கு சொல்லிஇருக்கிறேன் அது ஒரு உப்பு என்று.
  • நெருப்பு அதனை சூழ்ந்துள்ளது,(அங்குள்ள )ஜலம் அந்த நெருப்பினை விழுங்கி விட்டது.
  • அப்படி விழுங்கி விட்ட போதிலும் அந்த நெருப்பின் தன்மையை அதனால் மிஞ்ச முடியவில்லை.
  • அதனால்தான் அது ஞானிகளுடைய நெருப்பாக படைக்கப்பட்டுள்ளது. 
  • அந்த முரட்டுப்  பொருள் நெருப்போடு இணைந்து எரிகிறது.
  • நாம் நம் ஜலத்தோடு இருக்கிறோம்.


5.எது அதி உன்னதமான  உப்பாகும் ?  


தொடரும்.,

21.இதற்கு இணையான பொருள் எது ?


  • முன்னே சொன்ன பொருள் உனக்கு தெரியுமாயின்,இதற்கு இணையான மற்றோரு பொருள் அது இதுதான் என்பதை நீ சிரமமின்றி தெரிந்து கொண் டிருப்பாய்.
  • ஆதாலாலே அதனை தேடுவாயாக,ஏனெனில் இக்கலையில் உழைப்பவர்களுக்கு என்றே கடவுள் அப் பரிசினை படைத்துள்ளார்.
4.இந்த அல்கஹாஸ்ட்டிற்கு அடுத்த பொருள் எது ? 



தொடரும்.,

20.அது எந்த பொருளால் படைக்கப்பட்டது ?


  • அது அற்புதக் கலைத்திறனோடு படைக்கப் பட்ட வட்ட வடிவமாய்  சமைந்த ஒரு உன்னதமான உப்பு. 
  • அதி மதிநுட்பமும்,கலைத்திறனும் கொண்ட  ஒரு கலைஞனுடைய தேவைகள் எதுவாயினும் அதற்குரிய பதில்களை அது தன்னகத்தே கொண்டுள்ள வல்லபம் உள்ள பொருள்.இருந்த போதிலும்,
  • அது சாதாரணமாக தண்ணீரில் கரைந்து போகும்.ஒரு சாதாரண ஜடத்தன்மை கொண்ட உப்பு அல்ல.
  • ஆனால்,உப்பின் சுவை ஒத்த சாராயம் போன்றது.
  • அது சூட்டிலே பாகப்படும் போது அத்திரவத்தில் உள்ள ஈரத்தன்மை ஆவியாய் வெளியேறினும் அது திரண்டு கெட்டி பொருளாய் மாறுவதில்லை.
  • ஆயினும்,அதனது ஆவியின் சக்தி தனது நீர்மப் பரப்பில் எல்லா இடங்களிலும் சமமான அழுத்த நிலையில் வியாபித்து நிலைகொண்டு இருக்கும்.
  • இலகு தீயில் ஆவியாக மாறினும் வண்டல் போன்ற எப்பொருளையும் மிச்சம் விட்டு வைக்காமல் முற்றிலுமாய் ஆவியாக போய்விடும்.
  • இந்த ஆவி பொருள் அமிலமோ,அல்லது காராப் பொருளோ அல்ல.
  • ஆனால் உப்பே.
3.இதற்கு இணையான பொருள் எது ? 

தொடரும்.,