- அல்காஹஸ்ட் என்றால் என்ன ?
- அல்காஹஸ்ட் என்பது எல்லாவற்றையும் தன்னகத்தே கொண்டதும்,எல்லாவற்றின் முழுமையான குணங்களைக் கொண்டதுமான இந்த பிரபஞ்சத்திற்கே உரிய தெய்வீக தன்மை பொருந்திய நாத நீராகும்.
- ஒரே வார்த்தையில் விளக்குவதானால்,அகத்திலே தீயை தாங்கிய (அக்னி ஜலம் ) நெருப்புத் தண்ணீர் என்றும்.
- எதுவும் கலப்பட மற்றது.
- அழிவுறாதது.
- இது எல்லா பொருள்களிலும் ஊடுருவிப் பாய்ந்து அதனைத் திரவருபமாக கரைத்து அதன் அதனின் மேன்மையான திரவப் பொருளாக மாற்றிவிடும்.
- எந்தப் பொருளாலும் இதனுடைய சக்தியை தாங்கிக் கொள்ள முடியாது.
- இதனது சம தன்மையான குணத்தால், இதனால் பாகப்படும் எந்த வஸ்துக்களாலும் இது பாதிப்படைவதில்லை.
- இதன் இயற்கை தன்மை கெட்டுப் போவதுமில்லை,அதற்கு பதிலாக அந்தந்த வஸ்துக்களுக்குக் கேற்ப தான் ஈடு கொடுத்து,அவைகளை ஒரு உன்னத பொருளாக தோற்றம் செய்யும்.
- இது எல்லா வஸ்துக்களையும்,அதில் ஊடுருவிப் பாய்ந்து அவைகளை கரைத்து விட்ட போதிலும்,தான் முன்பு இருந்தது போலவே தனது உயர்வான பண்புகளையும்,புனித குணங்களையும் முழுமையான தனது இயற்கை குணத்தோடவே காணப்படும்.
- இது ஆயிரமாயிரம் முறை வஸ்துக்களிலே ஊடுருவிப் பாய்ந்து காரியபட்டாலும் தான் முன்பு ஆரம்பத்தில் இருந்தது போன்றே தனது இயற்கை குணத்தினின்றும் சிறிதும் வழுவாது நிலைத்து நிற்கிறது.
- நெருப்பின் தன்மையை ஒத்த தண்ணீர் என்று அழைக்கப்படும்.
- கலப்பட மற்றதும்,அழியாத் தன்மை பொருந்தியதுமாம்.
- இது எல்லாப் பொருள்களிலும் உள்ளே ஊடுருவிப் பாய்ந்து அதனைக் கரைத்து (அதன்- அதனின் ) மேன்மையான திரவப் பொருளாக மாற்றி விடும்.
- எந்த பொருளாலும் அதனுடைய சக்தியை தாங்க முடியாது.
- அதனால் பாகப்படும் எந்த பொருளாலும்,அவைகள் பாகப்படும் போது தான்(பொருள் ) பாதிப்படைவதில்லை.
- அந்த பொருள் கெட்டு போவதுமில்லை.
- பொருள்கள் பக்குவப்படும் வரை அதற்கு தான் ஈடு கொடுத்திருக்கும்.
- அதனை ஒரு உன்னத பொருளாக தோற்றம் செய்யும்.
தொடரும் .,
2.அது எந்த பொருளால் படைக்கப்பட்டது ?


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக