அடை வைத்த கோழி கழி கிற போது எச்சத்தில் வெள்ளை விழும்,அந்த வெள்ளையும் எருக்கன் பாலும் சேர்த்தரைத்து சல்லி காசுகளுக்கு பூசி கிளிஞ்சில் செப்பில் வைத்து முழப்புடமிட செம்பு சுத்தியாகும்.மேல் வேலைக்கு வைத்துக்கொள்ளவும்.
MUPPU,RASAMANI,VETHAI,VATHAM,THAGARAVITHTHAI,VAHARAM,GURU,GURUMARUNTHU,KALPAM,PERU MARUNTHU,GAVANAMANI,வாலாம்பிகை,முப்பூ,முப்பூ குரு,கற்பம்குளிகை,ரசவாதம்,,ரசமணி,சமாதி.பலராமையா,கருணாகர சாமிகள்,அமுத கலசம் ,அகரம்,உகரம்,மகரம்,அகர உகரம்,குண்டலி,யோகம்,அகில சிருஷ்டி,,ஏசுவின் போதனை,இஸ்லாம் போதனை,ராமலிங்கர் போதனை,அமுதம் வாழுமிடம்,வாத வைத்தியத்திற்கு ஆதி,உப்பில் பஞ்ச பூதம்,பாஷாணத்தில் பஞ்ச பூதம்,உப ரசத்தில் பஞ்ச பூதம்,பஞ்சேந்திரியமும்,அகரத்தின் ஆற்றலும்,பாரஸ்ல்ஸஸ் காய கல்பம்.
திங்கள், 19 ஆகஸ்ட், 2013
வெள்ளி, 16 ஆகஸ்ட், 2013
6.ரச வெள்ளி.
வயலில் இருக்கும் பல்லிப்பூண்டை சமூலமகா அரைத்து குகை பிடித்து அதில் ரசத்தை விட்டு மூடி சீலை செய்து 1 விராட்டியில் புடமிட வெள்ளியாம்.
சனி, 13 ஜூலை, 2013
5.அமுரி செய்முறை
புதன், 10 ஜூலை, 2013
3.அறுவகை உப்பு (செம்பு சுத்தி )
- அறுவகை உப்பு (செம்பு சுத்தி )
- சீனம்
- கம்பிஉப்பு
- கரிஉப்பு
- நவசாரம்
- துருசு
- வெங்காரம் சமன் காடி விட்டு அரைத்து புடமிடவும் .இது குரு .காப்பர் சுத்திக்கும்.or ஆறும் அப்படியே அரைத்து காப்பர் கவசித்து புடமிடவும்.இதுப்போல 3 புடமிட வெட்டை ஆகும்.பின் உருக்க வர்ணம் .
செவ்வாய், 25 ஜூன், 2013
2.சித்தர் இரசவாதம்
மூலிகை வாதம் :
அயப்பொடியைக்(ராவின இரும்பு தூளை ) கொடிவேலி சாறு விட்டு பிசரிக் காயவைத்து பிறகு எருக்கம் பாலும்,கரிஉப்பும் சேர்த்து அதில் போட்டு காயவைத்து மெழுகு பதமாய் இருக்கும் போது அதை உருட்டி மருதோன்றி இலையின் கல்கத்தால் கவசம் செய்து காடை புடமிடச் செம்பு.அதை மதியில் கொடுக்கவும்.
செவ்வாய், 26 ஜூன், 2012
1.பாதரசத்தை தங்கமாக மாற்றும் கலையே ரசவாதம் .
பாதரசத்தை தங்கமாக மாற்றும் கலையே ரசவாதம் .உண்மையிலே இப்படிப்பட்ட கலை ஒன்று உண்டா எண்ணும் ஐயம் பலருககு இருப்பதில் ஆச்சரியமில்லை .ஏன்னெனில் அப்படிப்பட்ட கலையை இப்பூதக் கண்களால் கண்டால் தவிர நம்ப முடியாது அல்லவா ? ஆனால் நாம் பார்க்காதவை எல்லாம் இல்லையென்ற பட்டியலில் சேர்ப்பது மடமையாகும் .தாயுமானவர் ,திருமூலர் ,கோரக்கர் ,அகத்தியர் ,முதலிய மகா ஞான சித்தர்கள் இந்த ரசவாதத்தைப் பற்றி வெகுவாகப் பாடியுள்ளார்கள்.பாதரசத்தையோ அல்லது மற்ற வெள்ளி ,தாம்பிரம் ,தகரம் ,இரும்பு முதலிய உலோகங்களைத் தங்கமாக மாற்றுவது அவர்கள் குறிக்கோள் அல்ல .ஏன்னெனில் அவர்கள் எல்லாம் துறந்த முனிவர்கள் .தங்கம் செய்து கடையில் விற்று உண்டு ,உடுத்தி ,மக்களுக்குப் பொருள் சேர்த்து வைக்க வேண்டிய அவசியம் அவர்களுக்கு இல்லை .மற்றும் அவர்கள் பசி ,பிணி ,மூப்பு ,சாக்காடு எனும் சூலத்திலிருந்து விடுபட்டவர்கள் .அப்படிஇருந்தும் ரசவாதம் செய்ய வேண்டிய அவசியம் அவர்களுக்கு ஏன் வந்தது ? மட்டமான உலோகங்களை எந்த மருந்து தங்கமாக்குமோ அம் மருந்தே நம் உடலையும் தங்கமாக்க கூடும் .என்பதே அப்பெரியோர்களின் கருத்து.
நவகிரகங்களின் அமைப்பு ஒருவன் ஜாதகத்தில் ரசவாத சித்திக்கு அமைதாலன்றி அவன் எந்த பாடு படினும் வெற்றி பெற முடியாதாம் .விட்ட குறை இருந்தால் தான் குரு தொட்டு க் காட்டுவார் என்பதாம் .
(செய்முறை 1.):
துருசு -1பலம் ,
ரசசெந்துரம் -1பலம் ,
ரசம் -1பலம்
இவை மூன்றையும் சேர்த்தரைத்து அகல சட்டியில் நடுவில் வைத்து ,மஞ்சள் கரிசாலை சார் பெரிய படி வைத்து கொண்டு ஓரு பீங்கான் கோப்பையை கொண்டு மருந்தை மூடி அதற்கு மேல் சாரை ஊற்றி அடுப்பு எரிக்கவும்.நான்கு ஜாமம் சிறு தீயாக எரிக்கவும் .நீர் சுண்டும் வரை எரித்து பிரித்து பார்க்க செந்துரம் போல இருக்கும் .இதில் குண்டுமணி வெள்ளிக்கு,1குண்டுமணி செந்துரம் கொடுத்தால் வேதையாகும் .அத்துடன் தாய் சரி எடை சேர்த்து கொள்ளலாம் .
நவகிரகங்களின் அமைப்பு ஒருவன் ஜாதகத்தில் ரசவாத சித்திக்கு அமைதாலன்றி அவன் எந்த பாடு படினும் வெற்றி பெற முடியாதாம் .விட்ட குறை இருந்தால் தான் குரு தொட்டு க் காட்டுவார் என்பதாம் .
(செய்முறை 1.):
துருசு -1பலம் ,
ரசசெந்துரம் -1பலம் ,
ரசம் -1பலம்
இவை மூன்றையும் சேர்த்தரைத்து அகல சட்டியில் நடுவில் வைத்து ,மஞ்சள் கரிசாலை சார் பெரிய படி வைத்து கொண்டு ஓரு பீங்கான் கோப்பையை கொண்டு மருந்தை மூடி அதற்கு மேல் சாரை ஊற்றி அடுப்பு எரிக்கவும்.நான்கு ஜாமம் சிறு தீயாக எரிக்கவும் .நீர் சுண்டும் வரை எரித்து பிரித்து பார்க்க செந்துரம் போல இருக்கும் .இதில் குண்டுமணி வெள்ளிக்கு,1குண்டுமணி செந்துரம் கொடுத்தால் வேதையாகும் .அத்துடன் தாய் சரி எடை சேர்த்து கொள்ளலாம் .
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)


