சனி, 25 அக்டோபர், 2014

19.அல்காஹஸ்ட் (THE SECRET OF THE LIQUOR ALKAHEST .("universal solvent")


  1.  அல்காஹஸ்ட் என்றால் என்ன ?
  • அல்காஹஸ்ட் என்பது எல்லாவற்றையும் தன்னகத்தே கொண்டதும்,எல்லாவற்றின் முழுமையான குணங்களைக் கொண்டதுமான இந்த பிரபஞ்சத்திற்கே உரிய தெய்வீக தன்மை பொருந்திய நாத நீராகும்.
  • ஒரே வார்த்தையில் விளக்குவதானால்,அகத்திலே தீயை தாங்கிய (அக்னி ஜலம் ) நெருப்புத் தண்ணீர் என்றும்.
  •  எதுவும் கலப்பட மற்றது.
  • அழிவுறாதது.
  • இது எல்லா பொருள்களிலும் ஊடுருவிப் பாய்ந்து அதனைத் திரவருபமாக கரைத்து அதன் அதனின் மேன்மையான திரவப் பொருளாக மாற்றிவிடும்.
  • எந்தப் பொருளாலும் இதனுடைய சக்தியை தாங்கிக்  கொள்ள முடியாது.
  • இதனது சம தன்மையான குணத்தால், இதனால்  பாகப்படும் எந்த வஸ்துக்களாலும் இது பாதிப்படைவதில்லை.
  • இதன் இயற்கை தன்மை கெட்டுப் போவதுமில்லை,அதற்கு பதிலாக அந்தந்த வஸ்துக்களுக்குக் கேற்ப தான் ஈடு கொடுத்து,அவைகளை ஒரு உன்னத பொருளாக தோற்றம் செய்யும். 
  • இது எல்லா வஸ்துக்களையும்,அதில் ஊடுருவிப் பாய்ந்து அவைகளை கரைத்து விட்ட போதிலும்,தான் முன்பு இருந்தது போலவே தனது உயர்வான பண்புகளையும்,புனித குணங்களையும் முழுமையான தனது இயற்கை குணத்தோடவே காணப்படும்.
  • இது ஆயிரமாயிரம் முறை வஸ்துக்களிலே ஊடுருவிப் பாய்ந்து காரியபட்டாலும் தான் முன்பு ஆரம்பத்தில் இருந்தது போன்றே தனது இயற்கை குணத்தினின்றும் சிறிதும் வழுவாது நிலைத்து நிற்கிறது.
  • நெருப்பின் தன்மையை ஒத்த தண்ணீர் என்று அழைக்கப்படும்.
  • கலப்பட மற்றதும்,அழியாத் தன்மை பொருந்தியதுமாம்.
  • இது எல்லாப் பொருள்களிலும் உள்ளே ஊடுருவிப் பாய்ந்து அதனைக் கரைத்து (அதன்-  அதனின் ) மேன்மையான திரவப் பொருளாக மாற்றி விடும்.
  • எந்த பொருளாலும் அதனுடைய சக்தியை தாங்க முடியாது.
  • அதனால் பாகப்படும் எந்த பொருளாலும்,அவைகள் பாகப்படும் போது தான்(பொருள் ) பாதிப்படைவதில்லை.
  • அந்த பொருள் கெட்டு போவதுமில்லை.
  • பொருள்கள் பக்குவப்படும் வரை அதற்கு தான் ஈடு கொடுத்திருக்கும்.
  • அதனை ஒரு உன்னத பொருளாக தோற்றம் செய்யும். 

தொடரும் .,

2.அது எந்த பொருளால் படைக்கப்பட்டது ?

வெள்ளி, 14 பிப்ரவரி, 2014

18.நாக கட்டு.








துத்தி இலையை அரைத்து 4.5 கிராம் சுத்தி செய்த சிறுகண் நாகத்திற்கு கவசம் செய்து முழ புடம் போட நீறும் .செம்பு வெள்ளியில் கொடுக்க பழுக்கும்.சகல நோய்களும் தீரும்.

17.சேர்மான வேதை (சிவவாக்கியர் .)

நல்ல வெள்ளி                                                              8 பங்கு 

கொன்று உயிர்ப்பித்த செம்பு                                     4பங்கு 

நாக கட்டு                                                                        2பங்கு 

தூய தங்கம்                                                                    2பங்கு 

வெண்காரம்                                                                   1பங்கு 

இவை அனைத்தையும் கூட்டி உருக்க 8 மாற்று பொன் கிடைக்கும்.

செவ்வாய், 11 பிப்ரவரி, 2014

16.ஜெர்மன் சில்வர் 2.




நிக்கல் 2 பங்கு 

செம்பு  6 பங்கு 

நாகம்  2 பங்கு 

இவை மூன்றையும் நன்றாய் உருக்கி நகைகள் செய்துகொள்ளவும்.

15.ஜெர்மன் சில்வர்,(நகைகள் செய்ய ),






நிக்கல் 1 பங்கு 
செம்பு   3 பங்கு 
நாகம்    1 பங்கு 

இவை மூன்றையும் நன்றாய் உருக்கி நகைகள் செய்துகொள்ளவும்.

14.செயற்கை பொன்.




வெடியுப்பு -1/2 பலம் ,
படிகாரம் -1/2 பலம் ,
நவச்சாரம் -1 விராகனெடை ,


இவைகளை கல்வத்திலிட்டு 3 மணிநேரம் எருக்கன் பால் விட்டு அரைத்து,வில்லை தட்டி காயவைத்து 5 விரட்டியில் புடமிடவும்.இம் மருந்தை மேற்படி பால் விட்டு முன்போல் அரைத்து வி.த.கா. 5 விரட்டியில் புடமிடவும். இப்படி புடம் மொத்தம் 3 போடவும்.பஸ்பம்.கல்காரக் புட்டியில் பத்திர படுத்தவும்.இது குரு மருந்து.சுத்தி செய்த செம்பை குகையிலிட்டு உருக்கி மேற்படி பஸ்பத்தில் ஒரு சிட்டிகை போடவும்.நல்ல செயற்கை பொன்னாகும்.

13.செயற்கை வெள்ளி.





நிக்கல்                                 40  மில்லி கிராம்

செம்பு                                  20   மில்லி கிராம் 

கட்டி தகரம்                        40 மில்லி  கிராம் 

சேர்த்து உருக்க செயற்கை வெள்ளி யாகும்.