சனி, 7 டிசம்பர், 2013

10.லோகத்தில் வேதிக்க

.
  • அரிதாரம் 
  • வெண்காரம் 
  • சாதி  லிங்கம் 
  • காரீயம் 
  • ரசம் 
  • யாவும் சமனெடை இவற்றை முறைப்படி தொந்தித்து பழச்சாறு விட்டரைத்து முட்டை தோட்டில் வைத்து மூடி வழுவாக சீலை செய்து 5 எருவில் புடமிட செந்தூரம்.சகல லோகத்திலும் 100 க்கு 1 கொடுக்க வேதை. 

வெள்ளி, 6 டிசம்பர், 2013

9.சீமை எருக்கு.








இதற்கு இந்துஸ்தானியில் ஆகிஹ் என்றும்,பஞ்சாபியில்,அகி என்றும் பெயர்.இதில் நாட்டு எருக்கிலிருந்து பால் வடிகிறது போல் வடிகிறதில்லை,ஆனால்,சுத்த ஜலம் போல் பால் வடியும்.பூ,காய் ஆகியவை உண்டு.செடியினடியில் ஐந்தாறு இலைகள் காணப்படும்.கிளைகளுண்டாகிற தில்லை.ஒரு சாண் முதல் ஒரு முழம் வரையில் வளரும்,மணர்பாங்கான விடங்களில் உண்டாகும்.இதனால் ரசம்,வங்கம்  ஆகியவை வெள்ளியாகும்.   

திங்கள், 26 ஆகஸ்ட், 2013

8.கௌரி கட்டு.

கருவங்கத்தை எலுமிச்சம் பழ சாற்றால் அரைத்து கௌரியின் மேல் பூசி அதன் மேல் துருசை மேற்படி சாற்றால் அரைத்து பூசி காய்ந்தபின்கல் உப்பையும் அரைத்து கவசித்து 30 நாழிகை வெயிலில் உலர்ந்த பின்பு,உப்பை மேலும் கீழும் கொட்டி 1 சாமம் எரித்து இறக்கி ஆறிய பின் எடுக்க கௌரி கட்டாகும். மதி ரவியில் வேதை.  

திங்கள், 19 ஆகஸ்ட், 2013

7.செம்பு சுத்தி

அடை வைத்த கோழி கழி கிற போது எச்சத்தில் வெள்ளை விழும்,அந்த வெள்ளையும் எருக்கன் பாலும் சேர்த்தரைத்து சல்லி காசுகளுக்கு பூசி கிளிஞ்சில் செப்பில் வைத்து முழப்புடமிட செம்பு சுத்தியாகும்.மேல் வேலைக்கு வைத்துக்கொள்ளவும்

வெள்ளி, 16 ஆகஸ்ட், 2013

6.ரச வெள்ளி.






 வயலில் இருக்கும் பல்லிப்பூண்டை சமூலமகா அரைத்து குகை பிடித்து அதில் ரசத்தை விட்டு மூடி சீலை செய்து 1 விராட்டியில் புடமிட வெள்ளியாம்.

சனி, 13 ஜூலை, 2013

5.அமுரி செய்முறை


  • அமுரி செய்முறை :


  1. வெடிஉப்பு =350 கிராம்,
  2. படிகாரம் ==875 கிராம், 
தனி தனியே இடித்து ஒன்றாக கலந்து வாலை எந்திரத்தில் போட்டு வெள்ளை நீரை விட்டு மஞ்சள் நீரையும்,கடும் மஞ்சள் நீரையும், பத்திரமாக பிடித்து காற்று புகாமல் பத்திர படுத்தவும். 

  • வாய்நீர் 
  • மூத்திரம் 
  • அண்டநீர்
  • புகைநீர் 
  • பழச்சாறு 
  • காடி நீர் 
  • நாதநீர் 
  • உமிழ்நீர் 
  • கற்றாழை நீர் 
  • சுண்ண நீர் 


4.சூத மணி (பாகம் -2).

சூத மணி (ரசக்கட்டு)






  • தவசி முருங்கை சாற்றில் வேணுமென்ற ரசத்தை விட்டு மத்திக்க முறிந்து நெய் போல் ஆகும்.இப்படி 3 தரம் செய்ய வெண்ணையாகும்.அதே இலையால் கவசம் செய்து அவிபுடம் இடவும்,இப்படி 3 முறை செய்ய கட்டும்.

புதன், 10 ஜூலை, 2013

3.அறுவகை உப்பு (செம்பு சுத்தி )


  • அறுவகை உப்பு (செம்பு சுத்தி )
  1. சீனம் 
  2. கம்பிஉப்பு 
  3. கரிஉப்பு 
  4. நவசாரம் 
  5. துருசு 
  6. வெங்காரம் சமன் காடி விட்டு அரைத்து புடமிடவும் .இது குரு .காப்பர் சுத்திக்கும்.or ஆறும்   அப்படியே அரைத்து காப்பர் கவசித்து புடமிடவும்.இதுப்போல 3 புடமிட வெட்டை ஆகும்.பின் உருக்க வர்ணம் .

செவ்வாய், 25 ஜூன், 2013

2.சித்தர் இரசவாதம்


மூலிகை வாதம் :

அயப்பொடியைக்(ராவின இரும்பு தூளை ) கொடிவேலி சாறு விட்டு பிசரிக் காயவைத்து பிறகு எருக்கம் பாலும்,கரிஉப்பும் சேர்த்து அதில் போட்டு காயவைத்து மெழுகு பதமாய் இருக்கும் போது அதை உருட்டி மருதோன்றி இலையின் கல்கத்தால் கவசம் செய்து காடை புடமிடச் செம்பு.அதை மதியில் கொடுக்கவும்