செவ்வாய், 11 பிப்ரவரி, 2014

16.ஜெர்மன் சில்வர் 2.




நிக்கல் 2 பங்கு 

செம்பு  6 பங்கு 

நாகம்  2 பங்கு 

இவை மூன்றையும் நன்றாய் உருக்கி நகைகள் செய்துகொள்ளவும்.

15.ஜெர்மன் சில்வர்,(நகைகள் செய்ய ),






நிக்கல் 1 பங்கு 
செம்பு   3 பங்கு 
நாகம்    1 பங்கு 

இவை மூன்றையும் நன்றாய் உருக்கி நகைகள் செய்துகொள்ளவும்.

14.செயற்கை பொன்.




வெடியுப்பு -1/2 பலம் ,
படிகாரம் -1/2 பலம் ,
நவச்சாரம் -1 விராகனெடை ,


இவைகளை கல்வத்திலிட்டு 3 மணிநேரம் எருக்கன் பால் விட்டு அரைத்து,வில்லை தட்டி காயவைத்து 5 விரட்டியில் புடமிடவும்.இம் மருந்தை மேற்படி பால் விட்டு முன்போல் அரைத்து வி.த.கா. 5 விரட்டியில் புடமிடவும். இப்படி புடம் மொத்தம் 3 போடவும்.பஸ்பம்.கல்காரக் புட்டியில் பத்திர படுத்தவும்.இது குரு மருந்து.சுத்தி செய்த செம்பை குகையிலிட்டு உருக்கி மேற்படி பஸ்பத்தில் ஒரு சிட்டிகை போடவும்.நல்ல செயற்கை பொன்னாகும்.

13.செயற்கை வெள்ளி.





நிக்கல்                                 40  மில்லி கிராம்

செம்பு                                  20   மில்லி கிராம் 

கட்டி தகரம்                        40 மில்லி  கிராம் 

சேர்த்து உருக்க செயற்கை வெள்ளி யாகும்.

ஞாயிறு, 2 பிப்ரவரி, 2014

12.துருசு செந்தூரம்.

வேலிபருத்தி




வெள்ளை மந்தாரை 




துருசு விராகனிடை 1. (3.5 கிராம் )உத்தாமணிப் பாலில் போட்டு(துருசு பாலில் மூழ்கி இருக்கவேண்டும் ) சூரியப்புடம் வைத்து எடுத்து வேலிபருத்தி சாறு விட்டு அரைத்து வேலிபருத்தி இலையை அரைத்து வில்லைக்கு கவசமிட்டு  சீலைமண்  செய்து உலர்த்தி  சிறு புடம் போட செந்துரமாகும்.இதை தக்க அனுபானங்களில் கொடுக்க பல நோய்கள் தீரும்.வெள்ளை மந்தாரை பூவின் சாற்றில் செம்பை உருக்கி சாய்க்கவும்.இது போல் 7 முறை செய்யவும்.இந்த செம்பில் மேற்படி மருந்தை உருக்கு முகத்தில் கொடுக்க வாங்கும்.வேதையாகும்.

புதன், 22 ஜனவரி, 2014

11.வெள்ளி வித்தை.

 வெள்ளீயத்தைகுப்பை மேனி சாற்றில் 7 முறை உருக்கி சாய்த்து, தகடு தட்டி செங்கொடிவெலி பட்டை பலம் 1 (35 கிராம் ),வாலை ரசம் (லிங்க ரசம் ) விராகன் 1(3.5 கிராம் ),கற்பூர வெற்றிலை சாற்றில் அரைத்து அந்த தகட்டிற்கு பொதிந்து சீலை மண் செய்து கஜபுடம் மிட்டு ஆறி எடுக்க சித்தியாகும். 

சனி, 7 டிசம்பர், 2013

10.லோகத்தில் வேதிக்க

.
  • அரிதாரம் 
  • வெண்காரம் 
  • சாதி  லிங்கம் 
  • காரீயம் 
  • ரசம் 
  • யாவும் சமனெடை இவற்றை முறைப்படி தொந்தித்து பழச்சாறு விட்டரைத்து முட்டை தோட்டில் வைத்து மூடி வழுவாக சீலை செய்து 5 எருவில் புடமிட செந்தூரம்.சகல லோகத்திலும் 100 க்கு 1 கொடுக்க வேதை.