வியாழன், 30 அக்டோபர், 2014

32.அங்கே அதன் எடை சம்பந்தமாக நீங்கள் கவனித்தது என்ன?


  • நான் கண்டவைகள் இவைகள் தான்,ஒரு ஆரோக்கியமான மனிதரிடம் இருந்து பெற்ற அமுரிக்கு மூன்று அவுன்சு அல்லது சற்று குறைவான,கூடுதலாக அதற்கு இணையான ஜலத்தோடு ஓப்பிடும் போது  சுமாராக எண்பது (80)அரிசி எடை. எடையில் வித்தியாசப் படுகிறது.
  • அதிலிருந்து மற்றொன்றும் கண்டேன்.முன் சொன்ன சமமான எடையில் எடுக்கப்பட்ட அமுரியையும்,ஊற்று ஜலத்தையும் வாலையில் வடித்த பின் அமுரியில் உள்ள அதிக பட்சமான உப்புக்கள் வாலையிலேயே விடுபட்டு போகின்றன.
  • எடையில் வித்தியாசம் இருப்பது உறுதியாகிறது.  

அவைகளின் சுபாவம்,பண்பு குறித்து என்ன கண்டீர்கள் ?


தொடரும் .,

31.உங்களுடைய சொந்தப் பாணியில் விளக்குங்கள் ?


  • அமுரிக்கு முறையோடு எது எது அத்தியாவசியமானதோ அவைகள் யாவும் அமுரி உப்பில் நிறைந்துள்ளது.
  • அதன் மணம் அதி நெடி உள்ளதாக இருக்கும்.
  • அதன் ருசி செய்பாக,கைபாக வித்தியாசங்களுக்கு ஏற்ப மாறுபட்டிருக்கும்.
  • அதாவது சில சமயங்களில் உப்பின் சுவை போன்றும்.
  • அமுரியின் அமுரியின் அம்சமான உப்பின் தன்மை போலும் இருக்கும்.
அங்கே அதன் எடை சம்பந்தமாக நீங்கள் கவனித்தது என்ன?

தொடரும்., 

30.அமுரியில்அபரிதமான கோழைப்பொருள்(சளி)இருப்பது எப்படி தெரியவரும் ?


  • அது எப்படி எனில் 
  • முதலில் அதனது ருசியிலிருந்தும்,
  • இரண்டாவதாக அதனுடைய எடையிலிருந்தும்,
  • மூன்றாவதாக அதனுடைய தனித்த புனித குணத் தன்மையிலிருந்தும் அதனை கண்டறியலாம். 


உங்களுடைய சொந்தப் பாணியில் விளக்குங்கள் ?

தொடரும் .,

29.மேலும் தெளிவாக புரியும் படி நீங்களே சொல்லவும்?


  • உனக்கு தெரியும்.நாம் அருந்தும் தண்ணீர் நீர் பையை சென்றடைகிறது.
  • அதன் தனிப்பட்ட குணத்தோடு ஒரு பகுதி அமுரியாக வெளிஏற்றப் படுகிறது.(இரத்தத்திலிருந்து பிரிந்து அதன் தனித்த குணம்,மனத்துடன், காடியாய் நீராக கழிந்து போகிறது).
  • இது பொருள்களில் ஆழ்ந்து ஊடுருவிப்பாயும் தன்மை உடையது.
  • அமுரி,ரத்தம் இரண்டிலும் காணும் உப்பின் தன்மை ஒன்று போலவே மாறுபாடு அடைவதில்லை.வேறு துறைகளில் காரியப் படாதவரை.
  • ஆதலால் எதுவாய் இருப்பினும் அமுரியில் கலந்திருப்பது உப்பு உள்பட லாபமற்ற கோழை பொருளே. 

அமுரியில்அபரிதமான கோழைப்பொருள்(சளி)இருப்பது எப்படி தெரியவரும் ?

தொடரும்., 


28.எங்கிருந்து இந்த சளி போன்ற கோழை பொருள் வந்தது ?அல்லது (பயனற்ற )ருசியற்ற நீர் கோவை உருவாகிறது ?


  • முக்கியமாக நாம் அருந்தும் பலவகை பானங்களில் இருந்தும் இது (கோழை பொருள் ) கிடைக்கிறது .
  • இருப்பினும் எல்லாப் பொருள்களும் அதற்குரிய கோழைப் பொருளை பெற்றுள்ளது.
மேலும் தெளிவாக புரியும் படி நீங்களே சொல்லவும்?


தொடரும்.,

27.குறிப்பாக இயற்கையின் அம்சமான அமுரியின் தன்மைக்கு,வித்தியாசமான வேறு எந்தப் பொருளாகிலும் அமுரியில் உள்ளனவா ?


  • வித்தியாசமான பொருள்கள் இருக்கின்றன.
  • அவைகள் முறையே,நீர்த்த,சளி போன்ற ஒரு பொருள்.
  • நாம் சாப்பாட்டுடன் சாப்பிடுகிறோமே கடல் உப்பு அது.
  • இவைகள் அந்த அமுரியில் முழுமையாக செரிக்கப் படாமல் (ஜீரணமாகாமல் )அப்படியே இருந்து கொண்டிருக்கும்.
  • பாகப்படுத்தும் போது இதனை அதிலிருந்து பிரித்து எடுத்து விட வேண்டும்.
  • அப்படி பாகப்படும்  பொழுது (இவைகளால் மேலும் இனி எந்தப் பிரயோஜனமும் இல்லை,என்று வரும்போது போதுமான நேரத்திற்கு பிறகு பிரித்து விட வேண்டும் )காரியம் முடிகிறது.

எங்கிருந்து இந்த சளி போன்ற கோழை பொருள் வந்தது ?அல்லது (பயனற்ற )ருசியற்ற நீர் கோவை உருவாகிறது ?

தொடரும்.,

புதன், 29 அக்டோபர், 2014

26.அதனுடைய எந்த பகுதி அப்படி உள்ளது ?



  • ஆவியாவதும்,அதிக நிலையானதும் ஆகும்.
  • அதனை எவ்வகையில் பாக படுத்த கருதுகிறோமோ அதற்கு ஏற்றார் போல் இதனை அநேக வகைகளாக மாற்றமுறச் செய்யலாம்.

குறிப்பாக இயற்கையின் அம்சமான அமுரியின் தன்மைக்கு,வித்தியாசமான வேறு எந்தப் பொருளாகிலும் அமுரியில் உள்ளனவா ?

தொடரும்.,